‘யெஸ்’ வங்கியால் இமாசலபிரதேசத்தில் ரூ.1,900 கோடி முடக்கம்


‘யெஸ்’ வங்கியால் இமாசலபிரதேசத்தில் ரூ.1,900 கோடி முடக்கம்
x
தினத்தந்தி 13 March 2020 7:10 AM GMT (Updated: 2020-03-13T12:40:52+05:30)

‘யெஸ்’ வங்கியால் இமாசலபிரதேசத்தில் ரூ.1,900 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

சிம்லா, 

நிதி நெருக்கடி, வராக்கடன் போன்ற காரணங்களால் ‘யெஸ்’ வங்கியை கடந்த வாரம் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இதனால் வங்கியின் பரிவர்த்தனை முடக்கப்பட்டது.

இமாசலபிரதேச மாநிலத்தில் யெஸ் வங்கியின் 9 கிளைகள் இருந்தன. அவற்றில் மாநில அரசு மற்றும் பொதுமக்கள் சார்பில் ரூ.1,919 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த தகவலை சட்டமன்ற கூட்டத்தில் மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் தெரிவித்தார்.

Next Story