இத்தாலியில் இருந்து 211 இந்திய மாணவர்கள் உள்பட 218 பேர் நாடு திரும்பினர்


இத்தாலியில் இருந்து 211 இந்திய மாணவர்கள் உள்பட 218 பேர் நாடு திரும்பினர்
x
தினத்தந்தி 15 March 2020 6:27 AM GMT (Updated: 15 March 2020 7:13 AM GMT)

இத்தாலி மிலன் நகரில் இருந்த 211 இந்திய மாணவர்கள் உள்பட 218 பேர் நாடு திரும்பினர்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் உலக முழுதும் பரவி வரும் நிலையில் பல நாடுகளில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் முயற்சியால்   'ஏர் இந்தியா' சிறப்பு விமானம் மூலம்  இத்தாலி மிலன் நகரில் இருந்த 211 இந்திய மாணவர்கள் உள்பட 218 பேர் நாடு திரும்பினர். இதில் தமிழகத்தை சேர்ந்த 55 மாணவர்களும் அடங்குவர். 

இதேபோல் மேற்காசிய நாடான ஈரானில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 131 மாணவர்கள், 103 யாத்ரீகர்கள் என 234 பேரையும் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக மஹான் விமானம், மூலம் ஈரான் சென்று மீட்டு, மும்பை வந்தடைந்தனர். 

ஈரானில் சிக்கித் தவித்த131 மாணவர்கள் உள்பட 234 பேர் பத்திரமாக இந்தியா மீட்டுவரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து தமது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 109 சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் 131 பேரை பத்திரமாக மீட்டு வந்துள்ளதாக கூறியுள்ளார். அதோடு, இந்திய மற்றும் ஈரான் தூதுவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், அனைவருக்கும் பாராட்டும் கூறியுள்ளார். 

நாடு திரும்பிய அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story
  • chat