அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கியது


படம்:Reuters
x
படம்:Reuters
தினத்தந்தி 23 March 2020 1:42 PM IST (Updated: 23 March 2020 3:41 PM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கியது.அதற்கான பூஜை இன்று நடைபெற்றது.

புதுடெல்லி

அயோத்தியில்  ராமர்  கோயில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கியது. ராமர் சிலை வைக்கப்படும் புதிய இடத்தைதேர்வு செய்து அங்கு பூஜை செய்யபட்டது. கட்டுமானப் பணி  தொடங்குவதற்கு முன்பு சிலையை கூடாரத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றும் பணி தொடங்கும். 

விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவரும், ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளருமான சம்பத் ராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமர் சிலை வைப்பதற்கான  இடத்தின் பிரதிஷ்டை இன்று  காலை 7 மணிக்கு தொடங்கியது. அறக்கட்டளை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ. இதில் கலந்து கொண்டனர். சிலை மார்ச் 25 ஆம் தேதி புதிய இடத்திற்கு மாற்றப்படும். முறையான அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர், கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என கூறினார்.
1 More update

Next Story