வீடியோ செய்தியை இன்று வெளியிடுகிறார், மோடி


வீடியோ செய்தியை இன்று வெளியிடுகிறார், மோடி
x
தினத்தந்தி 3 April 2020 1:08 AM GMT (Updated: 3 April 2020 1:08 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், இன்று வீடியோ செய்தி ஒன்றை வெளியிடுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று அவர், நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிடுகிறார். 

இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “3-ந்தேதி காலை 9 மணிக்கு ஒரு சிறிய வீடியோ செய்தியை எனது சக இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறேன்” என்று கூறியுள்ளார். அந்த வீடியோ, எது சம்பந்தப்பட்டது என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

Next Story