இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஆட்டம் கண்டுள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2069-ல் இருந்து 2,301 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், 157 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும், 56 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story