இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 3 April 2020 11:35 AM IST (Updated: 3 April 2020 11:35 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக  56 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக  உயர்ந்துள்ளது  என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம்,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 157 பேர் சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் பெற்றதால், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story