கொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை


கொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 3 April 2020 7:08 AM GMT (Updated: 3 April 2020 7:08 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால், ஊரடங்கை மீறி பல இடங்களில் மக்கள் வெளியே சுற்றி வருவதைக் காண முடிகிறது. ஊரடங்கை மீறி அநாவசியமாக சுற்றித்திரிந்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த சூழலில், கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்கள் 40 பேருடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், சச்சின் டெண்டுல்கர்,  கங்குலி, விராட் கோலி பி.வி. சிந்து, ஹிமா தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். 

 ஊரடங்கை மக்கள் கடைபிடிப்பதன் முக்கியத்துவம் பற்றி  விழிப்புணர்வு ஏற்படுத்துவது  தொடர்பாக பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் இது பற்றி கேட்ட போது, பிரதமர் மோடியுடனான காணொலி காட்சி ஆலோசனையில் தான் பங்கேற்றதாக தெரிவித்தார். ஆனால், இந்த ஆலோசனையில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து கருத்து கூற மறுப்பு தெரிவித்துவிட்டார். 

Next Story