மின்விளக்குகளை அணைத்து விட்டு ‘டார்ச் அடிப்பது கொரோனாவுக்கு தீர்வு ஆகாது’ - ராகுல்காந்தி பாய்ச்சல்


மின்விளக்குகளை அணைத்து விட்டு ‘டார்ச் அடிப்பது கொரோனாவுக்கு தீர்வு ஆகாது’ - ராகுல்காந்தி பாய்ச்சல்
x
தினத்தந்தி 4 April 2020 11:58 PM GMT (Updated: 4 April 2020 11:58 PM GMT)

மின்விளக்குகளை அணைத்து விட்டு டார்ச் அடிப்பது கொரோனாவுக்கு தீர்வு ஆகாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரசுக்கு எதிராக 130 கோடி இந்தியர்களும் ஒன்று பட்டு நிற்பதை அடையாளப்படுத்தும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, வீடுகளில் அகல்விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் டார்ச், செல்போன் விளக்குகளை எரிய விடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்தநிலையில், அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “கொரோனா வைரசுக்கு எதிரான போரில் போதுமான அளவுக்கு இந்தியாவில் பரிசோதனை வசதிகள் இல்லை. மக்கள் கை தட்டுவதும், வானில் டார்ச் விளக்கை எரியவிட்டு பிரகாசிக்க செய்வதும், பிரச்சினைக்கு தீர்வு ஆகாது” என சாடி உள்ளார்.

மேலும், பிற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா வைரசுக்கான பரிசோதனை வசதி போதாது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள படம் ஒன்றையும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Story