மராட்டியத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் புதிதாக மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய சுகாதாரத்துறை இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.
புனேவில் 19 பேர், மும்பையில் 11 பேர் சதரா, அகமெத்நகர் மற்றும் பல்கர் மாவட்டத்தில் தலா ஒருவர் என மொத்தம் 33 பேருக்கு கொரோனா புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story