துப்பாக்கி சூடு நடத்தி கொரோனாவுக்கு எதிரான நிகழ்வை கொண்டாடிய பாஜக பெண் தலைவர்!
உத்தரபிரதேசத்தின் பாஜக தலைவர் மஞ்சு திவாரி துப்பாக்கி சூடு நடத்தி கொரோனாவுக்கு எதிரான நிகழ்வை கொண்டாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
லக்னோ,
இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 4,289 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக போராட தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விளக்குகளை ஏற்றுமாறு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையின்படி நாட்டு மக்கள் மின்விளக்கை அணைத்து விளக்கேற்றினர்.
தீவிரத்தை உணராத சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்நிலையில், ஒற்றுமை விளக்கேற்றும் நிகழ்வை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்ட பாஜக மகளிரணி தலைவி மஞ்சு திவாரி கைத்துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு அந்த காட்சியை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவை அவரே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நுற்றுக்கணக்கானவர்களின் குடும்பங்கள் மீளா துயரத்தில் உள்ள போது ஆளும் கட்சியை சேர்ந்த பெண் தலைவர் துப்பாக்கி சூடு நடத்தி கொண்டாடியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story