ஊரடங்கு உத்தரவு: முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வெளியே சுற்றிய காண்டாமிருகம்


ஊரடங்கு உத்தரவு: முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வெளியே சுற்றிய காண்டாமிருகம்
x
தினத்தந்தி 7 April 2020 2:30 PM IST (Updated: 7 April 2020 2:30 PM IST)
t-max-icont-min-icon

நேபாளத்தில் நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு இடையே சாலையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

காட்மாண்டு

 நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு இடையே சாலையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் காண்டாமிருகம் ஒன்று, அந்த வழியே சென்ற நபரை துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. 

நேபாளம் சித்வான் தேசிய பூங்கா அருகே எடுக்கபட்ட 45 வினாடிகள்காட்சியை, இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதா என்று காண்டாமிருகம் ஆய்வு செய்வதாக நகைச்சுவையுடன் பலரும் கருத்து பதிவிட்டு இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.



Next Story