டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்த 150 பேர் மீது வழக்குப்பதிவு


டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்த 150 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 8 April 2020 4:15 AM GMT (Updated: 2020-04-08T09:45:36+05:30)

மராட்டியத்தில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்த 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

டெல்லியில் கடந்த மாதம் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதுவரை அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 400 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களில் 15 பேருக்கு மேல் உயிரிழந்து விட்டனர்.

இதையடுத்து நேற்று மும்பை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து 1916 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது. மேலும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட விவரத்தை மறைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தது.

இந்தநிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு விவரங்களை கூற மறுத்தவர்கள் மீது மும்பை மாநகராட்சி சார்பில் ஆசாத் மைதானம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து போலீசார் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு அந்த தகவலை மறைத்ததாக மும்பையை சேர்ந்த 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story