இந்திய எல்லை பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் துப்பாக்கி சூடு
இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
ஜம்மு,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு தோன்றிய சீனாவின் உகான் நகரில் இயல்பு நிலை திரும்பி ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது.
எனினும், 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இவற்றில் பாகிஸ்தான் நாடும் பாதிப்படைந்து உள்ளது. ஆனால் அங்கு வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கு போதிய உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அந்நாட்டு அரசு வழங்க முன்வரவில்லை.
இதனால் அந்த பகுதி மக்கள் தங்களுக்கு இந்திய அரசு மற்றும் ஐ.நா. சபை உதவி செய்ய முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் அவலநிலை கண்டு கொள்ளப்படாமலேயே உள்ளது.
இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்த மீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது. இன்றிரவு 8.45 மணியளவில் இந்தியாவின் ரஜோரி பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story