பிளாஸ்மா மருத்துவ சிகிச்சை மூலம் கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சை அளிக்கலாம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
பிளாஸ்மா மருத்துவ சிகிச்சை மூலம் கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வருகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப் படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் கொரோனா தனது தாக்குதலை நிறுத்தவில்லை. மாறாக வைரசால் நாளுக்குநாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தியாவையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8447ஆக உள்ளது. இந்த நிலையில், பிளாஸ்மா மருத்துவ சிகிச்சை மூலம் கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவரின் பிளாஸ்மா மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story