நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடய உள்ள நிலையில், நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை.
நாளையுடன் (14 ஆம் தேதி) நிறைவடைய உள்ள 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என்று செய்திகள் வெளியாகிவருகின்றன. இதனால், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு முறை உரையாற்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று செய்திகள் வெளியாகிவந்தன.
இதை உறுதிப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நாளை காலை பிரதமர் மோடி உரையாற்றும் போது, ஊரடங்கில் சில விதி விலக்குகளும் இருக்கலாம் என்று கடந்த சில நாட்களாக செய்தி வெளியாவதால், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Related Tags :
Next Story