கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க நீண்ட ஊரடங்கு அவசியம்-மத்திய அரசு


படம்: AP
x
படம்: AP
தினத்தந்தி 15 April 2020 8:27 AM GMT (Updated: 15 April 2020 8:27 AM GMT)

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க நீண்ட ஊரடங்கு அவசியம் என்று அரசு கூறி உள்ளது.

புதுடெல்லி

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  1,211 கொரோனா பாதிப்புகளும் மற்றும் 31 இறப்புகளும்  அதிகரித்து பதிவாகி உள்ளது. இது ஜனவரி மாதத்திற்குப் பிறகு மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 10,815 ஆக உயர்ந்து உள்ளது.  இதில் 353 பேர் உயிரிழந்துள்ளனர். 1,189 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கை  மே 3 வரை நீட்டிப்பதாக பிரதமர் அறிவித்ததைத் தொடர்ந்து, கொரோனா தொற்று  சங்கிலியை உடைக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று அமைச்சகம் கூறியது. "உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, திங்களன்று உலகம் முழுவதும் 76,498 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் மற்றும் 5,702 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது எங்கள் கூட்டு முயற்சியால் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடிந்தது" என்று இணைச் செயலாளர் சுகாதார அமைச்சில் லாவ் அகர்வால் கூறினார்.

மாநில சுகாதாரத் துறைகளின் தகவல்களின்படி கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 390 ஆக உயர்ந்து உள்ளது. மொத்த பாதிப்பு 11,350 ஆக உள்ளது. அவற்றில் 9,791 செயலில் உள்ளன.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகம் இந்த காலகட்டத்தில் வயதானவர்களுக்கு, குறிப்பாக நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. "மக்கள் ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் சமூக தொலைதூரங்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும், ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த வெதுவெதுப்பான நீரை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளைப் மேற்கொள்ள வேண்டும் மற்றும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஆரோக்யா சேது மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்,'சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Next Story