இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை: சுகாதாரத்துறை அமைச்சகம்


இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை:  சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 15 April 2020 12:15 PM GMT (Updated: 2020-04-15T17:45:05+05:30)

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  11,933 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பிலிருந்து 1,344 பேர் மீண்டுள்ளனர்.

கொரோனா பரவும் மைய இடங்களாக விளங்கும் பகுதிகளை கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள் எனவும், கொரோனா பாதிப்பு ஏற்படாத பகுதிகளை கொரோனா நான் ஹாட்ஸ்பாட் பகுதிகள் எனவும் மாவட்டங்களை நாங்கள் வரிசைப்படுத்தியுள்ளோம். இதன்படி, 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

207 மாவட்டங்கள்  சாத்தியமான ஹாட்ஸ்பாட்கள் / ஹாட்ஸ்பாட்கள் அல்லாதவை என்று  அடையாளம் கண்டுள்ளோம்.  நாட்டில், கொரோனா தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை. உள்ளூரில் சில பரவல் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் உத்திகளை அமல்படுத்துவதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது” என்றார்.


Next Story