ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை


ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 17 April 2020 4:25 PM GMT (Updated: 17 April 2020 4:25 PM GMT)

ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஐதராபாத், 

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றி உலக நாடுகளுக்கு பரவியது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் இன்றுவரை கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 452 ஆக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து மக்களிடையே கொரோனா பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை சோதனை செய்வதற்காக தென்கொரியாவில் இருந்து ஆந்திர மாநில அரசு சார்பில் சுமார் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் வாங்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் (COVID19) கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது.இதனை அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக அம்மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று வழக்குகள் பதிவாகியுள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்துமாறு முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரிசோதனையின் அளவை அதிகரிக்க அம்மாநில அரசால் சுமார் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் பெறப்பட்டுள்ளன.

Next Story