கொரோனா வைரசுக்கு எதிராக பல்நோக்கு தடுப்பூசியை இந்தியா சோதித்து வருகிறது


கொரோனா வைரசுக்கு எதிராக பல்நோக்கு தடுப்பூசியை இந்தியா சோதித்து வருகிறது
x
தினத்தந்தி 18 April 2020 5:04 AM GMT (Updated: 18 April 2020 5:04 AM GMT)

கொரோனா வைரசுக்கு எதிராக பல்நோக்கு தடுப்பூசியை இந்தியா சோதித்து வருகிறது என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் கூறி உள்ளார்.

புதுடெல்லி

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) இயக்குநர் ஜெனரல் டாக்டர் சேகர் மண்டே கூறியதாவது:-

தொழுநோய்க்கு எதிராக திறம்பட  ஒரு பல்நோக்கு தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் பரிசோதித்து வருகிறார்கள், மேலும் இது கொரோனா வைரஸை சமாளிக்க உதவ முடியுமா என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த தடுப்பூசி   நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

"டி.சி.ஜி.ஐ (இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல்) ஒப்புதலுடன், தொழுநோய்க்கு எதிராக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த தடுப்பூசி குறித்த சோதனைகளை நாங்கள் தொடங்கி உள்ளோம்,

"தடுப்பூசி தயாரிப்பது ஒரு நீண்ட செயல்முறையாகும். ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஒரு தடுப்பூசியை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இன்னும் இரண்டு ஒப்புதல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவை கிடைத்தவுடன், சோதனைகளைத் தொடங்குவோம்.  அடுத்த ஆறு வாரங்களுக்குள் முடிவுகள் கிடைத்துவிடும்.

வைரஸின் தோற்றம் மற்றும் பரவலைக் கண்டறிய உதவும் மரபணு வரிசைப்படுத்துதலில் இந்தியா ஈடுபட்டு  வருகிறது. வைரசுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு எதிர்ப்பை வளர்த்துக் கொள்கிறதா என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும் ன கூறினார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டறியப்பட குறைந்தது ஒருவருடம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.

Next Story