செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு; ஏர்டெல், வோடஃபோன், ஜியோ நிறுவனங்கள் அறிவிப்பு


செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு; ஏர்டெல், வோடஃபோன், ஜியோ நிறுவனங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 April 2020 8:03 AM GMT (Updated: 18 April 2020 8:03 AM GMT)

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்கள் செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.

புதுடெல்லி,

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்கள் மே 3ந்தேதி வரை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி காலத்தை நீட்டித்துள்ளன.  ஏற்கனவே ஊரடங்கை முன்னிட்டு ஏப்ரல் 17ந்தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஊரடங்கு கடந்த 14ந்தேதி நீட்டிக்கப்பட்டது.  வரும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு போதிய வசதி இல்லை என்பதால் வேலிடிட்டி காலத்தை அவை நீட்டித்துள்ளன.

இதனால் ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் வேலிடிட்டி காலம் முடிந்த பின்னரும் மே 3ந்தேதி வரை இன்காமிங் அழைப்புக்கான வசதியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை நீட்டித்து உள்ளன.

Next Story