குஜராத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7 பேர் பலி


குஜராத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7 பேர் பலி
x
தினத்தந்தி 18 April 2020 8:26 AM GMT (Updated: 2020-04-18T13:56:07+05:30)

குஜராத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

ராஜ்கோட்,

குஜராத்தில் கொரோனா பாதிப்புக்கு நேற்று மாலை 6 மணியில் இருந்து மருத்துவமனை கண்காணிப்பில் இருந்த 7 நோயாளிகள் பலியாகி உள்ளனர்.  இதனால் குஜராத்தில் பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து உள்ளது என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

இதேபோன்று குஜராத்தில் ஒரே நாளில் 176 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.  ஆமதாபாத் (143), சூரத் (13), வதோதரா (13), ராஜ்கோட் மற்றும் பவ்நகர் நகரங்களில் தலா 2 பேருக்கும், ஆனந்த், பரூச் மற்றும் பஞ்ச்மகால் நகரங்களில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்து உள்ளது.  88 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

Next Story