இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,265 ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,265 ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 April 2020 9:03 AM IST (Updated: 20 April 2020 9:03 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,265 ஆக உயர்வடைந்து உள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்து உள்ளது.  இதுவரை 2,230 பேர் குணமடைந்தும், 12,974 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,712 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 543 ஆக அதிகரித்து உள்ளது.  இதுவரை 2,547 பேர் குணமடைந்தும், 14,175 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,265 ஆக உயர்வடைந்து உள்ளது.

நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 4,203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதுவரை 507 பேர் குணமடைந்து உள்ளனர்.  223 பேர் பலியாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது.
1 More update

Next Story