மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா தொற்று


Representational image
x
Representational image

மராட்டிய மாநிலம் மும்பையில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. மராட்டியத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மராட்டியத்தில் 4203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புகைப்படக்கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், செய்தி சேகரிப்பவர்கள் என பத்திரிக்கை துறையை சேர்ந்த 173 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 53 பத்திரிகையாளர்களில் நிருபர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் என பலர் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story