இந்தியாவின் ராணுவ தளவாட பொருட்கள் ஏற்றுமதி கடந்த 4 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவின் ராணுவ தளவாட பொருட்கள் ஏற்றுமதி கடந்த 4 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது என புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி
உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இருந்து, இந்தியா இப்போது மெதுவாக ஒரு ஏற்றுமதியாளராக வளர்ந்து வருகிறது, கடந்த நான்கு ஆண்டுகளில் அதன் ஏற்றுமதிகளில் ஐந்து மடங்குக்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்புத் துறை டாஷ்போர்டு தகவல் படி, இந்தியாவின் இராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி 2016-17 நிதியாண்டில் ரூ.1521.86 கோடியில் இருந்து கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.8,620.59 கோடியாக ஆக அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி 5 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் 2020-21 நிதியாண்டிற்கான இலக்கு ரூ.15,000 கோடி என்று பாதுகாப்பு உற்பத்தித் துறை 2020 ஏப்ரல் 14 அன்று புதுப்பித்த தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்த அதிகரிப்பு முக்கியமாக மேக் இன் இந்தியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியத்துவம் காரணமாகும்.
பாதுகாப்பு உற்பத்தித் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தனியார் துறை நிறுவனங்கள் ஏற்றுமதி ஆர்டர்களின் மிகப்பெரிய பயனாளிகளாக உள்ளன.அவர்களின் ஏற்றுமதி 2016-17 நிதியாண்டில் வெறும் ரூ.194.35 லிருந்து 2019-20 நிதியாண்டில் ரூ.8013.65 ஆக உயர்ந்துள்ளது.
மறுபுறம், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் (பி.எஸ்.யூ) / ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை வாரியம் (ஓ.எஃப்.பி) 2016-17 நிதியாண்டில் ரூ.1327.51 லிருந்து 2019-20 நிதியாண்டில் வெறும் ரூ.403.94 ஆக குறைந்துள்ளது.
வருடம் | தனியார் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி அங்கீகார்ம் | பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் | வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் | மொத்த ஏற்றுமதி |
2016-17 | 194.35 கோடி | 1327.51 கோடி | 0 | 1521.86 கோடி |
2017-18 | 3163.16 கோடி | 1519.2 கோடி | 0 | 4682.36 கோடி |
2018-19 | 7387.23 கோடி | 932.86 கோடி | 0 | 8320.09 கோடி |
2019-20 | 8013.65 கோடி | 403.94 கோடி | 203 கோடி | 8620.59 கோடி |
2020-21 | 25.11 கோடி | 403.94 கோடி | 203 கோடி | 632.05 கோடி |
Related Tags :
Next Story