ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்


ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 21 April 2020 5:19 AM GMT (Updated: 21 April 2020 5:19 AM GMT)

ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நாட்டில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 590 ஆக அதிகரித்தும், பாதிப்பு எண்ணிக்கை 18,601 ஆக உயர்வடைந்தும் உள்ளது.

இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றி வரும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக 125 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story