இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 603 ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 603 ஆக உயர்வு
x
தினத்தந்தி 21 April 2020 12:27 PM GMT (Updated: 2020-04-21T17:57:46+05:30)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் வேகம் இன்னும் குறைந்தபாடில்லை.   

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1329 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18601-ல் இருந்து 18985 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 603 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3260 ஆக அதிகரித்துள்ளது. 

Next Story