சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் - நிதின் கட்காரி


சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் - நிதின் கட்காரி
x
தினத்தந்தி 2 May 2020 10:27 PM IST (Updated: 2 May 2020 10:27 PM IST)
t-max-icont-min-icon

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது மே 17ம் தேதி வரை அதனை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்த ஊரடங்கு காலத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை நிலவி வருகிறது.

ஏழைகள், விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கடந்த மாதம் 26-ம் தேதி ரூ.1.77 லட்சம் கோடி மதிப்பில் முதல் கட்ட பொருளாதார நிதித்தொகுப்பை நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்நிலையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களுக்கு வழங்கப்படும் பொருளாதார நிவாரணங்கள் குறித்து அரசு விரைவில் அறிவிக்கும்” என்று தெரிவித்தார். 

மேலும் ஊரடங்கு காலத்துக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் தொடர்பாக சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் அறிவுரைகள் வழங்கி வருகிறோம் என்றும், அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்த பரிந்துரைகளை பிரதமர் மோடி மற்றும் நிதி-மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பி உள்ளதாகவும் அவர் கூறினார். 

Next Story