தாராவியில் மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று
மும்பை தாராவி பகுதியில் மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பையில் உள்ள தாராவி குடிசைப்பகுதியை கடந்த ஒரு மாதமாக கொரோனா பாடாய்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 1-ந் தேதி இங்கு 56 வயது துணிக்கடைக்காரர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். இதையடுத்து இங்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதில் இன்று மட்டும் தாராவியில் புதிதாக 94 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் மும்பை தாராவி பகுதியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 590- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தாராவியில் இன்று 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியும் மக்கள் அடர்த்தி மிகுந்த இடமுமான தாராவி பகுதியில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மராட்டிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
Related Tags :
Next Story