இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 27.52% உள்ளது: மத்திய சுகாதாரத்துறை


இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 27.52% உள்ளது: மத்திய சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 4 May 2020 5:00 PM IST (Updated: 4 May 2020 5:00 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 27.52 சதவிகிதமாக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  எனினும் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை.  

இன்று மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால்  இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 42,533- ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 1074 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 

இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11,076 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 27.52 சதவிகிதமாக உள்ளது.  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு நாம்  சமூக இடைவெளியை பின்பற்றவில்லையென்றால், பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் வேகமாக  பரவு வாய்ப்புள்ளது” என்றார். 

மத்திய உள்துறை இணைச்செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா பேட்டி அளிக்கையில், “ மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என உறுதிப்படுத்த வேண்டும். சரக்கு போக்குவரத்தில் பிரச்சினை இருந்தால் உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்புகொள்ளலாம்” என்றார். 

Next Story