பொய்யான காரணங்களை காட்டி எங்கள் மீது போர் தொடுக்க இந்தியா திட்டம்- இம்ரான்கான்
பொய்யான காரணங்களை காட்டி எங்கள் மீது போர் தொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் கூறி உள்ளார்.
புதுடெல்லி
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான், இப்போது இந்தியா மீதான விஷம பிரச்சாரத்தையும் துவக்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள் உள்ளூர் பிரச்சினை என்றும் அதற்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ள அதன் பிரதமர் இம்ரான் கான், இந்தியா பொய்யான காரணங்களை காட்டி தங்கள் மீது போர் நடவடிக்கையை துவக்க திட்டமிட்டுள்ளதாக டுவிட்டரில் கதை அளந்துள்ளார்.
இம்ரான்கான் தனது டுவிட்டரில், இந்திய ஆக்கிரமிப்பு என்பது இந்தியாவின் ஒடுக்குமுறை மற்றும் காஷ்மீர் மிருகத்தனத்தின் நேரடி விளைவாகும். ஆர்.எஸ்.எஸ்-பாஜக இணைப்பின் பாசிச கொள்கைகள் கடுமையான அபாயங்களால் நிறைந்தவை. இந்தியாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் முன் சர்வதேச சமூகம் செயல்பட வேண்டும்.
பாகிஸ்தானை குறிவைத்து ஒரு தவறான போர் நடவடிக்கைக்கு ஒரு சாக்குப்போக்கைக் கண்டுபிடிப்பதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து நான் உலகிற்கு எச்சரிக்கை விடுத்து வருகிறேன். கட்டுப்பாடு முழுவதும் "ஊடுருவல்" பற்றிய இந்தியாவின் சமீபத்திய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இந்த ஆபத்தான நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாகும் என கூறி உள்ளார்
உலக நாடுகள் தலையிட்டு முடிவு காண வேண்டும் என சாத்தான் வேதம் ஒதுவது போல அவர் கூறியிருப்பது நகைப்புக்குரியது என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Indian Occupation is a direct consequence of India's oppression & brutalisation of Kashmiris.The fascist policies of the RSS-BJP combine are fraught with serious risks. The international community must act before India's reckless moves jeopardise peace & security in South Asia.
— Imran Khan (@ImranKhanPTI) May 6, 2020
I have been warning the world about India's continuing efforts to find a pretext for a false flag operation targeting Pakistan. Latest baseless allegations by India of "infiltration" across LoC are a continuation of this dangerous agenda.The Indigenous Kashmiri resistance against
— Imran Khan (@ImranKhanPTI) May 6, 2020
Related Tags :
Next Story