தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 1,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Maharashtra COVID-19 tally reaches 19,063 with 1089 new cases; death toll at 731

மராட்டியத்தில் இன்று மேலும் 1,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 1,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 1,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

இந்தியா முழுவதும் 56 ஆயிரத்து 342 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,886 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 540 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் அம்மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில் மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக மேலும் 1,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,063 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 37 பேர் கொரோனா தொற்றுக்கு காரணமாக உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 731 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3,470 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 2,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் புதிதாக 2,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. மராட்டியத்தில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலியாகியுள்ளனர்.
3. மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 105 பேர் பலி - 2,190 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 105 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை திடீர் வேகம் பிடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 2,190 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
4. மராட்டியத்தில் இன்று மேலும் 2,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 2,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் புதிதாக 2,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று புதிதாக 2,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.