"புலம் பெயர்ந்தோருக்கான அநீதியாகும்" மம்தா பானர்ஜிக்கு அமித் ஷா கடிதம்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரெயில்களை அனுமதிக்காதது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றும் அமித் ஷா மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி:
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதில் இருந்து மத்திய அரசும், மேற்குவங்க மாநிலஅரசாங்கமும் அடிக்கடி மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன. ஐ.எம்.சி.டி (மத்திய குழு) மாநிலத்தில் கொரோனா நெருக்கடியைக் கையாள்வதை ஆய்வு செய்ய வந்தது. அதிலிருந்து மேலும் மோதல் அதிகமாகி உள்ளது.
ஆய்வு செய்த மத்திய குழு திங்களன்று மாநிலத்தில் அதிக இறப்பு விகிதம், குறைந்த சோதனை மற்றும் பலவீனமான கண்காணிப்பு, ஆகியவை தெளிவான அறிகுறியாகும் என்று கூறி உள்ளது.
நாடுமுழுவதும் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு பயணத்திற்கு அனுமதி அளித்தது. மேற்கு வங்காளத்தில் இதுபோன்ற முதல் சிறப்பு ரயில் இந்த வாரம் ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து புறப்பட்டது - துர்காபூருக்கு அசன்சோல் வழியாக புறப்பட்டு சென்றது 1,200 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்றது.
முதல் ரெயில் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே முதல் மந்திரி மம்தா பானர்ஜி கேரளாவில் சிக்கித் தவிக்கும் மேற்கு வங்க தொழிலாளர்களை திரும்பக் கொண்டுவருவதாக டுவீட் செய்தார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.
அதில் மேற்கு வங்காளத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவது தொடர்பாக வங்காள அரசிடமிருந்து மத்திய அரசுக்கு எதிர்பார்த்த அளவிலான ஆதரவு கிடைக்க வில்லை என்று அமித் ஷா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் கடிதத்தில் ரெயில்வே துறை இயக்கும் "ஷ்ராமிக் (தொழிலாளி)" ரெயில்களை மாநிலத்திற்குள் மேற்கு வங்காள அரசு அனுமதிக்கவில்லை இது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.இது அவர்களுக்கு மேலும் கஷ்டங்களை உருவாக்கும்"
கொரோனா வைரஸ் ஊரடங்கு மத்தியில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் வீடு திரும்புவதற்கு மத்திய அரசு உதவி உள்ளது. ஒத்துழையாமை அதன் புலம்பெயர்ந்தோருக்கு சிரமங்களை உருவாக்கும் என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story