சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் வீட்டில் இருந்து விடைத்தாள்களை திருத்துவார்கள் - மத்திய மந்திரி தகவல்


சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் வீட்டில் இருந்து விடைத்தாள்களை திருத்துவார்கள் - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 10 May 2020 1:11 AM IST (Updated: 10 May 2020 1:11 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் வீட்டில் இருந்து விடைத்தாள்களை திருத்துவார்கள் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்து விட்ட நிலையில், ஊரடங்கின் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பாடங்களுக்கான தேர்வுகள் வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தேர்வு முடிந்த பாடங்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று தெரிவித்தார். ஆசிரியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து விடைத்தாள்களை திருத்துவார்கள் என்றும், 3 ஆயிரம் பள்ளிகளில் உள்ள 1½ கோடி விடைத்தாள்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணி 50 நாட்களில் நிறைவடையும் என்றும் அப்போது அவர் கூறினார்.

Next Story