டெல்லியில் கொரோனா பாதித்தவர்களில் 75 % பேருக்கு அறிகுறிகள் இல்லை - முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா பாதித்தவர்களில் 75 % பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை அல்லது லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு மிகவும் சொற்ப எண்ணிக்கையிலே இருப்பதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி அரசு கொரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை மிகவும் குறைத்து வெளியிடுவதாகக் காங்கிரஸ் கட்சி நேற்று குற்றம் சாட்டியது. மேலும், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது. இந்த சூழலில், கெஜ்ரிவால் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.
டெல்லியில் கொரோனா பாதிப்பால் இதுவரை 73 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 6,923 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், 2,069 -பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 91 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் 27 பேர் வெண்டிலேட்டர் சிகிச்சையிலும் உள்ளனர் என்று கெஜ்ரிவால் கூறினார்.
Related Tags :
Next Story