சிறப்பு ரெயில் சேவை : நாளை முதல் இயக்கப்படும் ரெயில்கள் பற்றிய விவரம்


சிறப்பு ரெயில் சேவை : நாளை முதல் இயக்கப்படும் ரெயில்கள் பற்றிய விவரம்
x
தினத்தந்தி 11 May 2020 9:48 PM IST (Updated: 11 May 2020 9:48 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரெயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை,

கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1-ந் தேதி முதல் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் ரெயில் போக்குவரத்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் தொடங்குவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.   ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் வகையில் 12-ந் தேதியில் (நாளை) இருந்து ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது நாளை டெல்லியில் இருந்து 15 ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட உள்ளன.  

இந்த ரெயில்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், ஆமதாபாத், செகந்திராபாத், திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேசுவரம், மட்கோன், ஜம்முதாவி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில்கள் அங்கு சென்றுவிட்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பி வரும்.

இந்த சிறப்பு ரெயில் செல்லும் நேரம் குறித்த கால அட்டவணையை ரெயில்வே வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து வாரம் இருமுறை டெல்லிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் காலை 6.35 மணிக்கு இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. 


Next Story