ஊழியருக்கு கொரோனா ஏர் இந்தியா தலைமை அலுவலகம் மூடப்பட்டது
ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஏர் இந்தியா தலைமை அலுவலகம் மூடப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ஏர் இந்தியா தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் மாலை உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த அலுவலக கட்டிடத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்த கட்டிடம் முழுவதும் மீண்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்ட பின்னர்தான் அலுவலகம் திறக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய மின்துறை அமைச்சக அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் மின்துறை அமைச்சக கட்டிடம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story