நிதியமைச்சர் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்கள் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சியடையும் - பிரதமர் மோடி
நிதியமைச்சர் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்கள் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சியடையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில், பிரதமர் மோடி கூறிய ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை வெளியிட்டார். நிதி அமைச்சரின் அறிவிப்புகள் குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
நிதியமைச்சர் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்கள் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சியடையும். சிறு, குறு நிறுவனங்களின் சிக்கல்களை தீர்த்து, நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும் வகையில் திட்டம் உள்ளது. பணப்புழக்கத்தை அதிகரிகும் வகையில் அறிவிப்புகள் உள்ளது. தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும். அவர்களின் போட்டி, உத்வேகத்தை அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story