கொரோனா தடுப்பு பணிக்காக PMCARES நிதியில் இருந்து ரூ.3100 கோடி ஒதுக்கீடு-பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
கொரோனா தடுப்பு பணிக்காக PMCARES நிதியில் இருந்து ரூ.3100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா தடுப்பு பணிகளுக்காக PMCARES நிதியில் இருந்து ரூ.3,100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. ரூ.1000 கோடி புலம் பெயர் தொழிலாளர் நலனுக்காகவும், ரூ.100 கோடி தடுப்பூசி கண்டுபிடிக்கவும், ரூ.2 ஆயிரம் கோடி வென்டிலேட்டர் வாங்கவும் ஒதுக்கப்படும் என்று பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 27-ம்தேதி PM - CARES- மத்திய நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. அறக்கட்டளை போன்று செயல்படும் இந்த அமைப்பிற்கு பிரதமர் மோடி தலைவராக இருப்பார். உறுப்பினர்களாக மத்திய அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் செயல்படுவார்கள்.
இந்த அமைப்புக்கு தனி நபர், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழில்துறை குழுமங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசு துறைகளில் இருந்து நிதி பெறப்படுகிறது. இந்த தொகைக்கு வரி கிடையாது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து, PM - CARES-க்கு நிதி வழங்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஏற்று பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்தனர். எனினும், ஏற்கனவே கடந்த 1948 முதல் பிரதமர் தேசிய நிவாரண நிதி இருக்கும் போது, புதிதாக PM -CARES- தேவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
Related Tags :
Next Story