டாஸ்மாக் வழக்கு- தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்


டாஸ்மாக் வழக்கு- தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 14 May 2020 1:48 PM GMT (Updated: 14 May 2020 1:48 PM GMT)

தமிழக டாஸ்மாக் மதுக்கடை திறப்பு தொடர்பாக தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

புதுடெல்லி,

மது விற்பனையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அமல் படுத்தாததால், ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைளை திறப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து  சென்னை ஐகோர்ட்டு கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டது. தேவைப்பட்டால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் (‘டோர் டெலிவரி’) முறையை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

இதனால் 2 நாள் விற்பனைக்கு பிறகு மதுக்கடைகளை தமிழக அரசு இழுத்து மூடியது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக கடந்த 9 ஆம் தேதி தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பபட்டது.  இந்த நிலையில், இந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. 

முன்னதாக, இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என்று கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story