மும்பை தாராவியில் மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி


மும்பை தாராவியில் மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 14 May 2020 9:42 PM IST (Updated: 14 May 2020 9:42 PM IST)
t-max-icont-min-icon

மும்பை தாராவி பகுதியில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மராட்டியத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் தாராவியில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,061 ஆக உயர்ந்து உள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு மேலும் இரண்டு பேர் இன்று உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story