இந்த ஆண்டில் 30 கோடி டன் உணவு தானிய உற்பத்தி: மத்திய அரசு தகவல்
இந்த ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 30 கோடி டன்னாக இருக்கும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பருவமழை போதிய அளவு பெய்ததால் 2019-2020-ம் பயிர் ஆண்டில் (ஜூலை- ஜூன்) இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 29 கோடியே 56 லட்சத்து 70 ஆயிரம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருப்பதாகவும், இது முந்தைய ஆண்டின் உற்பத்தியை விட 1 கோடியே 4 லட்சத்து 60 ஆயிரம் டன் அதிகம் என்றும் மத்தி வேளாண்மை துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டில் அரிசி உற்பத்தி 11 கோடியே 79 லட்சத்து 40 ஆயிரம் டன்னாகவும், கோதுமை உற்பத்தி 10 கோடியே 71 லட்சத்து 80 ஆயிரம் டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story