சிறு தொழிற்சாலைகளை பணியவைக்கும் நடவடிக்கை கூடாது: சுப்ரீம் கோர்ட்டு கருத்து
தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்காத சிறு தொழிற்சாலைகளை பணியவைக்கும் நடவடிக்கை கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஊரடங்கு காலத்தில் தங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த மார்ச் 29-ந் தேதி அறிவித்த உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று லூதியானா ஹேண்ட் டூல்ஸ் அசோஷியேஷன் என்ற அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை காணொலி வழியாக விசாரித்த நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் சிறு, குறு, தொழில்களின் அடிப்படையில் அமைந்த சிறிய தொழிற்சாலைகள் ஊரடங்கு காலத்தில் செயல்படவில்லை. எனவே இந்த தொழிற்சாலைகள் முழு ஊதியம் அளிக்க வேண்டும் என்று அவர்களை பணிய வைக்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் சரியானது அல்ல. இந்த மனுதொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story