5-வது கட்டமாக புதிய அறிவிப்புகள்: மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் - பிரதமர் மோடி


5-வது கட்டமாக புதிய அறிவிப்புகள்: மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 May 2020 6:08 PM IST (Updated: 17 May 2020 6:39 PM IST)
t-max-icont-min-icon

மத்திய நிதி மந்திரியின் 5வது கட்டமாக புதிய அறிவிப்புகள் மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகச் சரிவடைந்துள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தார். அதன்படி மக்களுக்கான ஐந்தாம் கட்ட திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை மத்திய நிதி மந்திரி  நிர்மலா சீதாராமன் இன்று பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். 

இந்தநிலையில் நிர்மலாசீதாராமனின் ஐந்தாவது கட்ட அறிவிப்பு குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய நிதி மந்திரி அறிவித்த சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள், சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறையில் மாற்றத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

அந்த நடவடிக்கைகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும். பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதவும். கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கும். 

மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

Next Story