மாநில தலைமை செயலாளர்களுடன் இன்று இரவு 9 மணிக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் ஆலோசனை
மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா இன்று இரவு 9 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில், காணொலி காட்சி மூலம் அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள் மற்றும் காவல்துறை இயக்குனர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 4வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், பல்வேறு தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்குவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள்துறை செயலாளர்கள் மற்றும் சுகாதார செயலாளர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 10 ஆம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது ஊரடங்கு காலத்தில் தொழில்துறைகளில் படிப்படியாக தளர்வுகளை ஏற்படுத்துவது குறித்து மத்திய அமைச்சரவை செயலாளரிடம், மாநில தலைமை செயலாளர்கள் எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story