மேற்கு வங்காளத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மம்தா பானர்ஜி அறிவிப்பு


மேற்கு வங்காளத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மம்தா பானர்ஜி அறிவிப்பு
x
தினத்தந்தி 18 May 2020 7:35 PM IST (Updated: 18 May 2020 7:35 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் வருகின்ற மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா,

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கையாக இந்த பொது முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு, 4-ஆம் கட்டமாக மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

தமிழ்நாடு, மாகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்திலும் மே 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் இரவு நேர ஊரடங்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் மக்கள் இரவு 7 மணிக்கு மேல் வெளியே வர வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மே 27-ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அல்லாத இடங்களில் வியாபாரிகள் கடைகளைத் திறந்துகொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story