கேரளாவில் நிபந்தனைகளுடன் சலூன், பியூட்டி பார்லர்களை திறக்க அனுமதி
கேரளாவில் நிபந்தனைகளுடன் சலூன் கடைகள் மற்றும் பியூட்டி பார்லர்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஊரடங்கு தளர்வுகள் பற்றிய சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இதன்படி, சுழற்சி முறையில் 50% கடைகளுடன் வணிக வளாகங்கள் இயங்கலாம். முடி திருத்தும் கடைகள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை ஏ.சி. போடாமல் திறந்திருக்கலாம். அவற்றில் முடி வெட்டுதல் மற்றும் ஷேவிங் தவிர்த்து வேறெதற்கும் அனுமதி இல்லை.
இதேபோன்று, அரசால் நடத்தப்படும் மதுக்கடைகள் ஆன்லைன் நடைமுறை தயாரானதும் திறக்கப்பட உள்ளன. பார்களில் மதுபானங்களை பெற்று சென்று விட வேண்டும். கிளப்புகளில் உணவு மற்றும் மது விற்பனைக்கு அனுமதி உள்ளது. ஆனால், அவற்றை பார்சல்களாக வாங்கி சென்று விட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
கேரளாவில் 29 புதிய பாதிப்புகள் உறுதியாகி உள்ளன. இவர்களில் 21 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 7 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். தொற்றுள்ளவருடன் கொண்ட தொடர்பு வழியே ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story