புதுச்சேரியை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதி


புதுச்சேரியை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதி
x
தினத்தந்தி 18 May 2020 9:52 PM IST (Updated: 18 May 2020 9:52 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ராஞ்சி,

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டன.  இவற்றில் பல மாநிலங்களில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.  நாட்டில் 4வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

கர்நாடகாவில் கடந்த 4ந்தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.  சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்கு பின், கடந்த 16ந்தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மது விற்பனை நடந்து வருகிறது.

புதுச்சேரியில் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தின் இறுதியில், நாளை முதல் அனைத்து மதுக்கடைகளையும் திறக்க அனுமதி அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரியை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.  இதற்கான அறிவிப்பினை மாநில முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்டுள்ளார்.

Next Story