கரையை கடந்து வரும் ஆம்பன் புயல்; ஒடிசா, மேற்கு வங்காளத்தில் 6.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்


கரையை கடந்து வரும் ஆம்பன் புயல்; ஒடிசா, மேற்கு வங்காளத்தில் 6.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 20 May 2020 4:36 PM IST (Updated: 20 May 2020 4:36 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பன் புயல் கரையை கடந்து வரும் நிலையில் ஒடிசா, மேற்கு வங்காளத்தில் 6.5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தேசிய பேரிடர் மேலாண் படை தலைவர் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சந்திப்பூர் நகரில் மழைப்பொழிவுடன், கடுமையான காற்று வீசி வருகிறது.  ஆம்பன் புயல் கடந்த 2.30 மணி முதல் கரையை கடந்து வருகிறது.  புயல் கரையை கடப்பதற்கு தொடர்ந்து 4 மணிநேரம் வரை ஆகும்.

ஆம்பன் புயல் கரையை கடந்து வரும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண் படை தலைவர் எஸ்.என். பிரதான் கூறும்பொழுது, மேற்கு வங்காளத்தில் இருந்து 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் மற்றும் ஒடிசாவில் இருந்து 1 லட்சத்து 58 ஆயிரத்து 640 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

பானி புயலில் ஏற்பட்ட அனுபவத்தினால், மரம் வெட்டும் கருவிகள், மின்கம்பங்கள் வெட்டும் கருவிகள் ஆகியவற்றை அனைத்து குழுக்களும் தயார் நிலையில் வைத்துள்ளன.  தேவைப்பட்டால் அவை உபயோகிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story