தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த அனுமதி - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு + "||" + All over the country 10, 12th grade are allowed to hold a common exam Home Ministry announces

நாடு முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த அனுமதி - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாடு முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த அனுமதி - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
நாடு முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 4ம் கட்டம் ஊரடங்கு மே 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் நிலவி வந்தது. 

இந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

*கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது.

*தேர்வு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

*தெர்மல் சோதனை, சானிடைசர், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

*தேர்வு மையங்களுக்கு செல்லும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

*ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்க வேண்டும்.

*கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களிலும் தேர்வு நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதியே ஊரங்கில் இந்த தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் ஒரே நாளில் 28 ஆயிரம் பேருக்கு தொற்று: 551 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் ஒரே நாளில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 551 பேர் உயிரிழந்தும் இருக்கிறார்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
2. நாடு முழுவதும் நடந்து வரும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 90 லட்சத்தை கடந்தது
நாடு முழுவதும் நடந்து வரும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 90 லட்சத்தை கடந்துள்ளது.
3. ராஜஸ்தானில் நடைபெறவுள்ள 10, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
ராஜஸ்தானில் நாளை நடைபெறவுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
4. நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 வரை ரயில் சேவை ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
5. சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.