உள்நாட்டு விமான சேவை 25 ந்தேதி தொடங்கும் - ஹர்தீப் சிங் பூரி


உள்நாட்டு விமான சேவை 25 ந்தேதி தொடங்கும் - ஹர்தீப் சிங் பூரி
x
தினத்தந்தி 20 May 2020 5:30 PM IST (Updated: 20 May 2020 5:30 PM IST)
t-max-icont-min-icon

உள்நாட்டு விமான சேவை 25 ந்தேதி தொடங்கும் என விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 57-நாட்கள் ஆகியுள்ள போதிலும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,06,750- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  3303 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது 15 ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளது.  அடுத்தமாதம் முதல் 200 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த சேவையில் ஏசி வசதி  இல்லாத ரெயில்களும் அடங்கும்.

அதுபோல் உள்நாட்டு விமான சேவையை மே 25 ந்தேதியில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அனைத்து விமான நிலையங்களும் விமான நிறுவனங்களும் மே 25 முதல் நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்க தெரிவிக்கப்பட்டு உள்ளன. பயணிகள் இயக்கத்திற்கான எஸ்ஓபிகளும் சிவில் விமான அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன என விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து உள்ளார்.

Next Story